Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா187 நாணயங்களை வயிற்றுக்குள் வைத்திருந்த முதியவர் ; ஷாக்கான மருத்துவர்கள்..

    187 நாணயங்களை வயிற்றுக்குள் வைத்திருந்த முதியவர் ; ஷாக்கான மருத்துவர்கள்..

    கர்நாடகாவில் முதியவர் ஒருவரின் வயிற்றிலிருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான நாணயங்கள் அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்டது. 

    கர்நாடக மாநிலத்தில் ராய்ச்சூர் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சந்தே கெல்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன். 60 வயதாகும் இவர் வாந்தி மற்றும் வயிற்றுவலி போன்ற உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

    அந்த மருத்துவமனையில், திம்மப்பா ஹரிஜனின் வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தவர்கள், வயிற்றில் நாணயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். இதைத்தொடர்ந்து, மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென பரிந்துரைத்தனர். 

    இதன்பேரில், அவருக்கு பாகல்கோட்டில் உள்ள ஹனகல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அவரின் வயிற்றிலிருந்து 1 கிலோவுக்கும் அதிமான எடையுள்ள பல்வேறு நாணயங்கள் அகற்றப்பட்டுள்ளது. 

    மேலும், திம்மப்பா ஹரிஜன் வயிற்றிலிருந்து மொத்தமாக 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இவற்றுள், ஐந்து ரூபாய் நாணயங்கள் 56, இரண்டு ரூபாய் நாணயங்கள் 51, ஒரு ரூபாய் நாணயங்கள் 80 ஆகியவை இருந்துள்ளது. 

    திம்மப்பா ஹரிஜன் சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு நாணயங்களை விழுங்கியுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    பிரதமர் வந்தபோது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை-டிஜிபி சைலேந்திர பாபு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....