Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேருடன் பேச்சு - பகீர் கிளப்பிய எடப்பாடி

    திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேருடன் பேச்சு – பகீர் கிளப்பிய எடப்பாடி

    தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 10-பேர் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டியில் அதிமுக பிரமுகர் இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக தொண்டர்கள் அனைவரும் மிகுந்த பாசமிக்கவர்கள். அதனால்தான் என்னால் கட்சியை மிகச்சிறப்பாக வழிநடத்தி செல்ல முடிகிறது. ஒரு தொண்டன் என்ற முறையில் மட்டுமே நான் இவ்விழாவில் கலந்து கொள்ள வந்தேன்.

    திமுக எம்எல்ஏ.,க்கள் 10 பேர் எங்கள் கட்சியில் வந்து சேர்வதற்காக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஒரு குடும்பக்கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதி ஒரு எம்.எல்.ஏ மட்டுதான். எந்த பதவியிலுமே இல்லாத அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அமைச்சர்கள் தொடங்கி வைக்க வேண்டிய திட்டங்களை அவரே துவங்கி வைக்கிறார்.

    அதிமுக தொண்டர்களால் ஆளப்படும் கட்சி. அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு போனது குறித்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தி.மு.க. அரசு முன்வரவில்லை. இந்த ஆட்சியில் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் கிடையாது, திருட்டு போன ஆவணங்களை கண்டுபிடிக்க போலீசாரும் கிடையாது. உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் முதல்வரும் தமிழகத்தில் இல்லை. நீதிமன்றத்திற்கு சென்றபிறகு தான் சிபிசிஐடி விசாரணையே நடைபெற்றது. பிரதான ஒரு எதிர்க்கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டதாக புகார் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காதது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக இருப்பதையே காட்டுகிறது என கூறினார்.

    மேலும் தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை எடுப்பதை விட்டு விட்டு, அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக நடை பயணம் மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று (செப்.,8) காலை 10 மணியளவில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்’ என தெரிவித்திருந்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகழேந்தி என்பவர் டிஜிபி அவர்களிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில் சிபிசிஐடி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவகத்தில் அனுமதிக்க கூடாது என அந்த புகார் மனுவில் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....