Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுT20 ஐபிஎல் தொடரில் வரவிருக்கும் புதிய விதிமுறை? சப்ஸ்ட்டியூட்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்

    T20 ஐபிஎல் தொடரில் வரவிருக்கும் புதிய விதிமுறை? சப்ஸ்ட்டியூட்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்

    இருபது ஒவர் போட்டிகளில் ‘இம்பாக்ட் வீரர் (impact player)’ முறையை அறிமுகப்படுத்துவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

    கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பொதுவாக, பரவலாக மூன்று வகையான விளையாட்டு முறை அமலில் உள்ளது. அவைகள் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் போட்டி போன்றவையாகும். தற்போதைய காலக்கட்டத்தில் இருபது ஓவர் போட்டிக்கு என்று பெரும் ரசிக கூட்டம் உள்ளது. 

    இப்படியான, இருபது ஓவர் போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், இந்திய கிரிக்கெட் வாரியமும் அவ்வபோது புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதும், விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருதையும் நிகழ்த்தும்.

    இதையும் படிங்க : இருபது ஓவர் தொடரில் முகமது ஷமி நீக்கம்… மாற்று வீரர் யார் தெரியுமா ?

    அந்த வகையில், தற்போது ‘இம்பாக்ட் வீரர் (impact player)’ முறை இருபது ஓவர் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறை மூலம் களத்தில் இல்லாத வீரரை அணிகள் புதியதாக ஆட்டக்களத்திற்குள் களமிறக்கலாம். 

    அதாவது, ஆட்டத்தில் விளையாடும் 11 வீரர்களை அறிவித்து விட்டாலும், இந்த 11 வீரர்களில் இல்லாத ஒருவர் ஆட்டத்தின் போது களமிறக்கப்படுவர். முன்னதாக, ஆட்டக்களத்தில் எவருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ, மேற்கொண்டு விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலோ அவருக்கு பதிலாக மாற்று வீரர் (sbstitute player) களமிறக்கப்படுவர். ஆனால், களமிறங்கும் வீரரால் பீல்டிங் மட்டுமே செய்யப்படும். 

    ஆனால், இந்த ‘இம்பாக்ட் வீரர் (impact player)’ முறையில் களமிறங்கும் வீரர் பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் ஈடுபடலாம். இந்த முறையானது வரும் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கவுள்ள இருபது ஓவர் சையது முஸ்டாக் அலி கோப்பையில் அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து ஐபிஎல் தொடரிலும் இம்முறை அமல்படுத்தப்பட உள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....