Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅடுத்த சீசனிலும் தோனிதான் கேப்டன் - சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

    அடுத்த சீசனிலும் தோனிதான் கேப்டன் – சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

    அடுத்த சீசனிலும் தோனியே சென்னை அணியை வழிநடத்துவார் என சென்னை அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

    இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் ரசிக பட்டாளம் வேறு எந்த அணிக்கேனும் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே! இந்த ரசிக பட்டாளத்திற்கு முதற் காரணம் என்னவென்று பார்த்தால் அந்த காரணமாக மகேந்திர சிங் தோனிதான் இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பித்த காலத்தில் இருந்தே சென்னை அணியின் கேப்டனாக, ஆணி வேராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி! 

    இதுவரை நடைபெற்ற அத்தனை ஐபிஎல் தொடரிலும் தோனி கேப்டனாக மட்டுமே செயல்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணி இல்லாமல் இருந்த இரண்டு வருடங்களில் கூட புனே அணிக்கு தோனி கேப்டனாக செயல்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதற்கு முன்னர்  சில போட்டிகளுக்கு மட்டும் சுரேஷ் ரெய்னா வழிநடத்தியுள்ளார். ஆனால் பெரும்பாலான போட்டிகளில் மகேந்திர சிங் தோனியின் தலைமையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இயங்கிக்கொண்டிருந்தது.

    தோனி தலைமையில் சென்னை அணி இதுவரை நான்கு முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றிருக்கிறது. சென்னை அணி என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது மகேந்திர சிங் தோனியும் அவரின் தலைமையும்தான். 

    இந்நிலையில், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடஜா நியமிக்கப்பட்டார். பின்பு, கடந்த சீசனின் பிற்பகுதியில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதை அடுத்து, தற்போதைய சூழலில் வருகிற ஐபிஎல் தொடருக்கு சென்னையின் கேப்டனாக யார் இருப்பார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்தது. 

    இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் காசி விஸ்வநாதனிடமும் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அடுத்த சீசனிலும் தோனியே சென்னை அணியை வழிநடத்துவார் எனக் கூறியுள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். 

    இனி கிரிக்கெட்டுக்கு விளம்பரதாரர் பேடிஎம் இல்லையாம் – வெளிவந்த அதிரடி அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....