Thursday, March 23, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷின் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்! நாளை இப்படியொரு ட்ரீட் உள்ளதாம்!

    தனுஷின் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்! நாளை இப்படியொரு ட்ரீட் உள்ளதாம்!

    கார்த்திக் நரேன் அவர்களின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம்தான், மாறன்! இத்திரைப்படத்திற்கு ஜீ.வீ.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சத்யஜோதி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 

    maaran மாறன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்த போதே,  தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ‘வீ டிமான்ட் மாறன் இன் தியேட்டர்ஸ்’ என்ற டேக்குகளை பயன்படுத்தி மாறன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுங்கள் என முழக்கங்களை, பதிவுகளாக பதிவிட்டு வருகின்றனர்.

    ஆனால், துரதிஷ்ட வசமாக மாறன் திரைப்படம் ஓடிடியில்தான் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக மாறன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்தது. அதன் பின்னர் மாறன் திரைப்படத்தில் இருந்து பொல்லாத உலகம் என்ற பாடல் வெளியானது. இப்பொல்லாத உலக பாடலில் துளியும் எனர்ஜி குறையாமல் அதே சமயம் ஸ்டைலிஷாக தனுஷ் அவர்கள் நடனம் ஆடி பலரையும் கவர்ந்திருப்பார். பொல்லாத உலகம் பாடலும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

    இந்நிலையில், மாறன் திரைப்படத்தில் இருந்து ‘அண்ணண தாலாட்டும்’ என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாட்களுக்கு பிறகு, தனுஷ் திரைப்படத்தில் இருந்து பாடல் வெளியாவதால், தனுஷ் இரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். 

    மேலும், ஜீ.வீ.பிரகாஷ் குமார் இசையில், பாடலாசிரியர் விவேக் அவர்களின் வரியில் ‘அண்ணண தாலாட்டும்’ பாடல் பலரையும் கவரும் என்கிறது திரையுலகு! 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    sivagangai

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்களை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நேற்று சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு...