Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்...

    கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்…

    கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

    நடிகர், தனுஷ் ராக்கி, சாணிக்காயிதம் என வெற்றித்திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 1930-களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாக உள்ளது. 

    கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும், சில்லுக்கருப்பட்டி திரைப்பட புகழ் நிவேதிதா சதிஷூம் நடித்து வருகின்றனர். 

    சமீபத்தில், தென்காசியில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. இந்நிலையில், தென்காசியின் மத்தளம்பாறை அருகே தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு முறையான அனுமதி பெறவில்லை எனச் சொல்லி நேற்று நிறுத்தப்பட்டது. 

    இந்நிலையில், தற்போது முறையான அனுமதி பெற்று அதே இடத்தில் படப்பிடிப்புப் பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி நேற்று படமாக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால், தென்காசி ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் படப்பிடிப்புக்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இன்று மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிகிறது.

    500 சில்லறை மதுபான விற்பனை கடைகள்; மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....