Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவங்கதேசத்துக்குச் செல்லும் இந்திய அணி; வெளிவந்த அட்டவணை...

    வங்கதேசத்துக்குச் செல்லும் இந்திய அணி; வெளிவந்த அட்டவணை…

    இந்தியா – வங்கதேச அணிகள் பங்கேற்கும் தொடர்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு சென்றுள்ளது. வருகிற 23-ம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. 

    இந்நிலையில், இந்திய அணியின் சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

    இந்தச் சுற்றுப்பயணத்தில், இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இப்போட்டிகள் நவம்பர் 18 முதல் நவம்பர் 30 வரை நடைபெறுகின்றன. இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி 

    வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    இதையும் படிங்க: இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினா ‘சிறை’ தான்! சூதாட்ட பிரியர்களுக்கு ‘செக்’ வைத்த தமிழக அரசு

    இந்நிலையில், வங்கதேசத்துடனான இந்தியா அணி மோதவுள்ள ஆட்டத்திற்கான அட்டவணையை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ல் தொடங்கி டிசம்பர் 10-ல் முடிவடைகிறது. அதேபோல, முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்றும் 2- வது டெஸ்ட் டிசம்பர் 22 அன்றும் தொடங்குகின்றன. 

    இந்தியா – வங்கதேச அணிகள் பங்கேற்கும் தொடர்களின் அட்டவணை 

    டிசம்பர் 4: முதல் ஒருநாள், டாக்கா 

    டிசம்பர் 7: 2-வது ஒருநாள், டாக்கா 

    டிசம்பர் 10: 3-வது ஒருநாள், டாக்கா 

    டிசம்பர் 14-18: முதல் டெஸ்ட், சட்டோகிராம்

    டிசம்பர் 22-26: 2-வது டெஸ்ட், டாக்கா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....