Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த வாரங்களில் தொடர் கனமழை மற்றும் கடும் குளிர் காணப்பட்டது. தற்போது மழை இல்லாமல் இருப்பதாலும், குளிரும் சற்று அங்கு குறைந்து இருப்பதாலும் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

    அதே சமயம், ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி என பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால், பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

    சிறப்பு தரிசன சீட்டுகளை பெற்று செல்லும் பக்தர்கள் சில மணி நேரங்களில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிறப்பு தரிசன சீட்டுகளை பெறாமல், இலவச தரிசனம் வழியாக செல்லும் பக்தர்கள் சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக குடோன்களில் அடைக்கப்பட்டு காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

    நேற்று மட்டும் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தினர். மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலுக்கு 3.26 கோடி ரூபாய் வசூல் ஆகியது.

    சீனாவில் இருந்து கோவை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....