Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபயணிகள் கவனத்திற்கு, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் தமிழகத்தில் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பயணிகள் கவனத்திற்கு, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் தமிழகத்தில் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தீபாவளி விடுமுறைக்காக மூன்று நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயலூரில் உழைக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் பேருந்துகள் பற்றாக்குறை, கூட்ட நெரிசல் என பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

    இந்த இன்னல்களை தவிர்க்க தமிழக அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. 

    சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து விடுமுறை வருவதால், 3 நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் கூடுதலாக 3 நாட்களில் 10518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    மேலும், கோவை உள்ளிட்ட மற்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு 6370 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. சென்னையில் உள்ள வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க:விபத்தை தடுக்க பள்ளி பேருந்துகளில் இது கட்டாயம்: தமிழக அரசிதழில் வெளியான அதிரடி உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....