Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுறைந்து வரும் கொரோனா தொற்று: இன்றய பாதிப்பு நிலவரம்

    குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்றய பாதிப்பு நிலவரம்

    புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் நேற்றைய தொற்று பாதிப்பு 2,141 ஆக இருந்த நிலையில், இன்று சற்று குறைந்து 2,119 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும் .

    இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,38,636 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,037 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,953 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,582 பேர் குணமடைந்துள்ளனர் .இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,84,646 ஆக அதிகரித்துள்ளது .

    நேற்று ஒரு நாளில் மட்டும் 4,63,338 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .இதனால், நாடு முழுவதும் இதுவரை 2,19,50,97,574 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: அதிகாரம் இன்று என்னிடம் இருந்திருந்தால் ! ‘பாட்டாளி மாடல்’ ஆட்சி எப்படி இருக்கும் என விவரித்த அன்புமணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....