Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்மாணவி பிரியா மரணத்தில் கடமையை செய்ய தவறிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு: அமைச்சர்...

    மாணவி பிரியா மரணத்தில் கடமையை செய்ய தவறிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு: அமைச்சர் மா.சுப்ரமணியன்

    மாணவி பிரியா மரணத்தில் கடமையை செய்ய தவறிய மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தேவை பட்டால் மாவட்ட மருத்துவமனைகளில் இன்னும் ஓராண்டில் காக்ளியர் இன்பிலாண்ட் அறுவை சிகிச்சைகான கட்டமைப்பு உருவாக்கபடும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட காது மூக்கு தொண்டை உயர்நிலை நிலையத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு நிகழ்சிகள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், மேயர் பிரியா, ஆகியோர் கலந்து கொண்டனர் ,

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியம்..,

    ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 400 காக்ளியர் இன்பிலாண்ட் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த 2012 ம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை 5035 காக்கிலியர் இன்பிலாண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செவிதிறன் கருவிகள் அளிக்கபட்டுள்ளதாக தெரிவித்த அவர் இதற்காக 358 கோடியே 44 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டில் செலவு செய்யபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    இந்தியாவிலே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் 2022 வரை 87, 294 பயனாளிகளுக்கு காதுகேள் கருவி 70 கோடியே 17 லட்ச ரூபாயில் காப்பீட்டு திட்டம் மூலம் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

    19 அரசு மருத்துவமனைகளில் தற்போது இந்த காக்கிலியர் இன்பிலாண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாக கூறினார். தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தேவை பட்டால் மாவட்ட மருத்துவமனைகளில் இன்னும் ஓராண்டில் காக்ளியர் இன்பிலாண்ட் அறுவை சிகிச்சைகான கட்டமைப்பு உருவாக்கபட்டு, பயிற்சிக்கள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.மாணவி பிரியா மரணம் தொடர்பாக சம்மந்த பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் எனவும், கவன குறைவால் கடமையை செய்ய தவறிய மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக கூறினார்.

    இதையும் படிங்கஅரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி உயரும்: முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....