Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமிசோரம் கல் குவாரி விபத்து: தீவிரமாகும் மீட்பு பணி! தொழிலாளர்களின் நிலை என்ன?

    மிசோரம் கல் குவாரி விபத்து: தீவிரமாகும் மீட்பு பணி! தொழிலாளர்களின் நிலை என்ன?

    மிசோரமில் கல் குவாரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

    தெற்கு மிசோரம், ஹனாதியால் என்ற கிராமத்தில் நேற்று பிற்பகலில் கல் குவாரியில் பல தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென குவாரி இடிந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. கல்குவாரியில் வேலை செய்தவர்கள் மிசோரத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் அவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து மிசோரத்திற்கு வேலைக்காக சென்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

    குவாயியில் தொழிலாளர்கள் கற்களை உடைத்து சேகரிக்கும் சமயத்தில் குவாரியில் உள்ள தளர்வான மண் சரிந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. 

    இந்தச் சம்பவம் அறிந்து வந்த மாவட்ட அதிகாரிகளும், மருத்துவ குழுவினரும் மீட்பு பணியிலும் முதலுதவி சிகிச்சையும் அளித்தனர். மேலும், தன்னார்வலர்களும் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். 

    இந்நிலையில் இன்று காலை காணாமல் போன விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இதையும் படிங்ககிறிஸ்துமஸ் தீவில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஊர்வலம்: பாதுகாப்பை பலப்படுத்திய ஆஸ்த்திரேலியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....