Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமக்களே உஷார்! கேரளாவில் பரவும் கொடிய வைரஸ்? இனி நீர் மற்றும் உணவில் கவனம் தேவை

    மக்களே உஷார்! கேரளாவில் பரவும் கொடிய வைரஸ்? இனி நீர் மற்றும் உணவில் கவனம் தேவை

    கேரள மாநிலத்தில் ஷிகெல்லா வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    கேரளாவில் அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் ஷிகெல்லா வைரஸ் அம்மாநிலத்தையே அச்சுறுத்தியுள்ளது. சமீபத்தில், காரச்சேரி பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனுக்கு ஷிகெல்லா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, சிறுவனுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் இரண்டு பேருக்கு ஷிகெல்லா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொற்று பரவி வருவதால், அங்கு நோய்த்தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

    ஷிகெல்லா வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறி கடுமையான வயிற்றுப் போக்கு என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நோயாளிகளின் மலம் மூலமாகவும் இந்த நோய் பரவும் என்று தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பானது, குழந்தைகளை அதிகம் தாக்கும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க:புதிதாக இன்று 1,112 பேருக்கு கொரோனா தொற்று…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....