Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகொடைக்கானலில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

    கொடைக்கானலில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

    கொடைக்கானலில் ‘சிட்டி வியூ’ பகுதியில் காட்டுத் தீ தொடர்ந்து 2-வது நாளாக எரிந்து வருகிறது. 

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வரும் முன் மலைப்பகுதி முழுவதும் தீ தடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம். அதே சமயம், தீ தடுப்பு குறித்து கிராம மக்களுக்கு பயிற்சியும் வழங்குவர். மேலும் தீ தடுப்பு மேலாண்மையில் இருந்து நூற்றுக்கும் அதிகமான ஆட்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளித்து வருவர். 

    இந்நிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், இந்த ஆண்டு காட்டுத் தீ குறித்த எந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆண்டு அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொடைக்கானல் ‘சிட்டி வியூ’ பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுது தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்தக் காட்டுத் தீயில் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. 

    நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....