Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கண்டுபிடிக்கப்பட்டதா புற்றுநோய் மருந்து? - மகிழ்ச்சியில் மக்கள்!

    கண்டுபிடிக்கப்பட்டதா புற்றுநோய் மருந்து? – மகிழ்ச்சியில் மக்கள்!

    புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் புற்றுநோய் மையம் அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர்.

    உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானதாக புற்றுநோய் திகழ்கிறது. பல்வேறு வகையான புற்றுநோய் உள்ள நிலையில், அதற்கான சிகிச்சை முறைகளும் கடும் வலியை ஏற்படுத்தும் வகையிலும், செலவு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    இந்நிலையில், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக டாஸ்டர்லிமேப் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவ ரீதியாக பயன்படுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது.

    மூன்று வாரத்துக்கு ஒரு முறை வீதம், தொடர்ந்து 6 மாதங்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்ட இந்த மருந்தானது, மனித உடலில் மாற்று ஆண்டிபாடிகளாக செயல்படுகிறது. 6 மாத சிகிச்சைக்குப் பிறகு, அனைவருக்கும் புற்றுநோய் முற்றிலுமாக குணமடைந்தது.

    இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளைப் பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து, அதன்பின் இந்த டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான ஆப்ரேஷனும் செய்யப்படவில்லை. பொதுவாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெரும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும். ஆனால், இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை.

    பக்க விளைவா?..

    பொதுவாக இது போன்ற சிகிச்சைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். ஆனால், டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே ரூ. 9 லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள்.

    இந்த மருந்து மார்கெட்டிற்கு வரும் போது இதை விட கூடுதலாக இருக்கும். அதே சமயம் இந்த மருந்தை மற்ற மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மற்றவர்கள் பொதுவாக இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பே இந்த மருந்து மார்கெட்டிற்கு வரும். அதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் புற்று நோய் மையத்தின் மருத்துவ நிபுணர் லூயிஸ் டையஸ் கூறியிருப்பதாவது: “குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு, தங்கள் மருத்துவ மையத்தில் சுமார் 6 மாதங்களுக்கு, புற்றுநோயை குணப்படுத்தும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட டோஸ்டார்லிமாப் என்ற மருந்து அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவருமே புற்றுநோயில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் மருத்துவ நிபுணர் லூயிஸ் டையஸ் தெரிவித்துள்ளார்”.

    இது மிகப் பெரிய ஆச்சரியம் என தெரிவித்துள்ள நியூயார்க் புற்றுநோய் மையம், அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு சோதிக்கப்படும் என்றும், அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    சுற்றுச்சூழல் முன்னெச்சரிக்கை; ஏற்றுக்கொள்ளாத இந்தியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....