Monday, April 29, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்மின்சாரம் தாக்கிய பசுவை காப்பாற்றிய மாமனிதர்!

    மின்சாரம் தாக்கிய பசுவை காப்பாற்றிய மாமனிதர்!

    பஞ்சாப் மாநிலம் மான்சா நகரில், மின் கம்பியில் சிக்கி துடித்து கீழே விழுந்த பசுவை, ஒரு நபர் காப்பாற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

    அந்தக் காணொளியில், மான்சா சாலையில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதில் பசு ஒன்று நடந்து செல்கிறது. அப்போது திடீரென அப்பசு துடி துடித்து தேங்கியிருந்த தண்ணீரில் விழுகிறது. பசு கீழே விழுந்தும் துடிப்பதை நிறுத்தவில்லை. இதனை கவனித்த அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர், மின் கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதால்,  பசுவின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கவனித்த நபர் ஒருவர், அந்த பசுவின் கால்களில் துணியைக் கட்டி இழுக்கிறார். மேலும் ஒரு நபரும் உதவ முற்படுகிறார். தொடர்ந்து, அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பசுவை மீட்கின்றனர். பிறகு, அந்த பசு நலமுடன் நடந்து செல்கிறது. 

    இந்தக் காணொளியானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....