Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிஅதிகரிக்கு கொரோனா தொற்று; அரங்கேறிய பாதுகாப்பு ஒத்திகை..

    அதிகரிக்கு கொரோனா தொற்று; அரங்கேறிய பாதுகாப்பு ஒத்திகை..

    கோவிட்-19 மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் தலைமையில் கோவிட் 19 பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்தியாவில் கோவிட்-19 மீண்டும் அதிகரித்தால், அந்த பரவலைக் கட்டுப்படுத்த  தயாராகும் வகையில் நாடு முழுவதும் இன்று கோவிட் 19 பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

    அதன்படி புதுச்சேரியில், கோரிமேட்டில் அமைந்துள்ள அரசு மார்பக நோய் மருத்துவமனையில் கோவிட் 19 பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  

    மாவட்ட ஆட்சியர் வல்லவன் தலைமையில் நடைபெற்ற கோவிட்-19 பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் புதுச்சேரியில் கோவிட் 19 நோய் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் 

    குறித்தும், மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. 

    சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் G.ஸ்ரீராமுலு, கோவிட் 19 நோடல் அதிகாரி ரமேஷ், அரசு மார்பக நோய் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது உடன் இருந்தனர்.

    பதநீரை மூலப் பொருளாகக் கொண்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டம் – எடுத்துரைத்த அமைச்சர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....