Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கர்ப்பிணியருக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் ஊழலா?

    கர்ப்பிணியருக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் ஊழலா?

    ‘கர்ப்பிணியருக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதலுக்காக, தமிழக அரசு விடுத்த, 480 கோடி ரூபாய் டெண்டரில், 100 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த டெண்டரில் ஆவின் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது’ என, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திமுக-விற்கு எதிராக கூறியுள்ளார்.

    இந்தச் செய்தி வெளியான பின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘ஆவின் பால் பவுடர் ஊட்டச்சத்துக்கானது அல்ல; டீ, காபியில் கலந்து சாப்பிடத் தான் பயன்படும். ‘ஆவின் ஹெல்த் மிக்ஸ் கர்ப்பிணியருக்கு உதவுமா என்பது கேள்வியாக இருக்கிறது. விலை குறைவு என்பதால் ஆவினில் வாங்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.

    அதேநேரத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கு மிக மோசமான பொருட்களை வழங்கிய நிறுவனம், அனிதா டெக்ஸ்காட். அந்த நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க, அரசு அதிகாரிகள் அனுமதித்தது எப்படி என்று தான் கேள்வி எழுகிறது.

    பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் குறித்து புகார்கள் எழுந்தவுடன், ‘தவறு செய்த அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    அப்படி இருந்தும், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய நிறுவனம், யாருடைய நிர்ப்பந்தத்தில் டெண்டரில் பங்கேற்றது என்ற கேள்விக்கு அமைச்சர் உட்பட, யாரும் இன்று வரை பதில் தரவில்லை.

    இதிலிருந்தே அண்ணாமலை குற்றச்சாட்டில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் நம்முள் எழுகிறது. ‘விலை போகாத சரக்கை வந்தவன் தலையில் கட்டு’ என்ற ஒரு பழமொழி உண்டு. புகாருக்கு ஆளான நிறுவனமே டெண்டரில் பங்கேற்க அனுமதித்துள்ளதை பார்க்கும் போது, அரசின் நடவடிக்கை இந்த பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது.

    கர்ப்பிணி பெண்களுக்கு, 32 சத்துக்கள் கொண்ட மாவு தேவை. அவர்களுக்கு தரமற்ற மாவு வழங்கினால், உயிருக்கே உலை வைத்து விடும். அப்படி இருந்தும், புகாருக்கு ஆளான நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க முற்பட்டு உள்ளனர். இது மிகப்பெரிய தவறாகும். மக்களின் உயிருடன் அரசு விளையாடுவது சரியில்லை.
    ஆனால் இந்த அரசை நாம் தானே தேர்ந்தெடுத்தோம். நாம் செய்த பாவத்திற்கு, இப்போது தண்டனை அனுபவிக்கிறோம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை.

    இரயில் எஞ்சினுக்கு அடியில் அமர்ந்து 190 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....