Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வரும் கொரோனா தொற்று

    3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வரும் கொரோனா தொற்று

    புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் நேற்றைய முன்தினம் கொரோனா தொற்று பாதிப்பு 3,805 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் குறைந்து 3,011 ஆக பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 03) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 02) அன்று வெளியான பாதிப்பை விட குறைவாகும்.

    இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டி 4,45,97,498 -ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்தனர். இதில் 20 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,701 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 4,301 குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,32,671 ஆக அதிகரித்துள்ளது .

    காலை 9 மணி வரை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,70,034 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் இதுவரை 2,18,77,06,075 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராடினால் ‘எஸ்மா’ சட்டம் பாயும்-தமிழிசை எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....