Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகட்டடம் இடிக்கும் பொழுது நேர்ந்த விபத்தில் பெண் பலி; ஒப்பந்ததாரர் கைது

    கட்டடம் இடிக்கும் பொழுது நேர்ந்த விபத்தில் பெண் பலி; ஒப்பந்ததாரர் கைது

    சென்னையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பலியாகிய சம்பவத்தில், கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே கடந்த 27-ஆம் தேதி அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

    அந்நேரத்தில், அந்த பகுதியில் சென்றுக்கொண்டிருந்த நபர்கள் மீது அந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் அந்த நபர்கள் சிக்கினர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்தோர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். 

    இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சுற்றுச்சுவரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், வங்கியில் பணிபுரியும் இளம்பெண் உயிரிழந்தார். மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கிய 2 பெண்கள் படுகாயமடைந்தனர். 

    இந்நிலையில், அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டிடத்தை இடிக்கும் பணிகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ‘ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகரன், ஜேசிபி இயந்திர ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 

    இவர்களைத் தொடர்ந்து, இன்று கட்டிட ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் கட்டிடத்தின் உரிமையாளர் சையது அலி பாத்திமா, பொறியாளர் ஷேக்பாய் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நடிகர் ரஜினிகாந்த் பெயர், குரல், புகைப்படம் பயன்படுத்த தடை – அதிரடி அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....