Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிரைவில் வருகிறது ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை; புதிய ஒப்பந்தம் கையெழுத்து

    விரைவில் வருகிறது ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை; புதிய ஒப்பந்தம் கையெழுத்து

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    சென்னை, அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ளது மெட்ரோ தலைமையகம். இந்நிலையில், இங்கு நேற்று ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பதற்கான 946.92 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

    முன்னதாக மெட்ரோ ரயில் திட்டம் இரண்டில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் இதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, திருவாளர் அலிஸ்டோம், டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ராஜிவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

    இந்த ஒப்பந்தத்தின் படி, ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் 2024 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதையடுத்து, ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனை ஓட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் சேவைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்கதேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....