Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதிப்பு

    இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதிப்பு

    மழை பொழிவதால் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான இருபது ஓவர் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 3 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இவற்றில் முதல் இருபது ஓவர் போட்டி இன்று வில்லிங்டனில் நடைபெறவுள்ளது. 

    இருபது ஓவர் போட்டியில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையேற்றுள்ளார். மேலும், விவிஎஸ் லக்ஷ்மண் தற்காலிக பயிற்சியாளராக செயல்படுகிறார். இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சந்தித்த பின்னடைவுகளை இனி வரும் போட்டியில் இந்திய அணி தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், மழைக்காரணமாக 12 மணியளவில் தொடங்கவிருந்த ஆட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை டாஸ் போடப்படவில்லை. வெளிவந்துள்ள தகவலின்படி விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அணி விவரங்கள்;

    இந்திய அணி: 

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த், இஷான் கிஷண், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

    நியூஸிலாந்து அணி: 

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவன் கான்வே, லாக்கி ஃபெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் சௌதி, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.

    தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....