Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅந்தமானில் அடுத்தடுத்து ஆறு முறை நிலநடுக்கம்!

    அந்தமானில் அடுத்தடுத்து ஆறு முறை நிலநடுக்கம்!

    அந்தமானில் இன்று காலை முதல் அடுத்தடுத்து ஆறு முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

    அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை 11:05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவானது. 

    இதன்பின், பிற்பகல் 1:55 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆகப் பதிவானது. முறையே, 2:06 மணிக்கு 4.6 ஆகவும், 2:37 மணிக்கு 4.7 ஆகவும், 3:02 மணிக்கு 4.4 ஆகவும், 3:25 மணிக்கு 4.6 ஆகவும் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

    மதியம் 3:02 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கு 256 கிமீ தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், இதேபோல், 3:25 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கில் 256 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

    உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து; பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் பலி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....