Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா - ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர் பாதிப்பா?

    இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா – ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர் பாதிப்பா?

    இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நான்கு மாத காலத்தில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 17,336 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கேரளா, கர்நாடக மற்றும் டெல்லியில் கோவிட் பாதிப்படைந்தோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

    நேற்று (ஜூன் 23) 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று, பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரமாக பதிவானது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,62,294 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,029 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,27,49,056 ஆனது. தற்போது 88,284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கோவிட் காரணமாக 13 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,954 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 196.77 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 13,71,107 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், நாட்டில் சிறார்கள் மற்றும் வயது வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டப்பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரே நாளில் 14 லட்சத்து 99 ஆயிரத்து 824 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 196 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள காகித பஞ்சம்!! அடுத்த இலங்கையாக மாறிவருகிறதா??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....