Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தியை கேலி சித்திரமாக்கிய பாஜக..வெகுண்டு எழுந்த காங்கிரஸ்

    ராகுல் காந்தியை கேலி சித்திரமாக்கிய பாஜக..வெகுண்டு எழுந்த காங்கிரஸ்

    பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட வீடியோவால் காங்கிரஸ் கட்சி கடுப்பாகியுள்ளது. 

    ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்னவெனில் இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இவரின் இந்த பயணத்திற்கு பா.ஜ.க பல கருத்துகளை முன்வைத்து வருகிறது.

    ராகுல் காந்தியின் இந்த பயணமானது கடந்த மாதம் 7-ம் தேதி தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்நிலையில், ராகுல் காந்தி குறித்து கேலிச்சித்திர விடியோவை பாஜக நேற்று வெளியிட்டது. இந்த வீடியோவை கண்ட காங்கிரஸ் இதனை கடுமையாக சாடியுள்ளது.

    அந்த வீடியோவில் ‘ஷோலே’ ஹிந்தி திரைப்படத்தில் வரும் நடிகர் கோவர்தன் அஸ்ரானியின் சிறைக்காவலர் கதாபாத்திரத்தைப் போன்ற தோற்றத்தில் ராகுலை சித்திரித்து, கேலிச்சித்திர வீடியோவை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த வீடியோவும், ராகுல் காந்தி குறித்த பாஜகவின் விமர்சன பதிவும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

    இதைத்தொடர்ந்து, வீடியோ குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு கிடைத்து வரும் வெற்றியை எதிர்க்க பாஜக கையாண்டுள்ள யுக்திதான் இந்த விடியோ. அக்கட்சியின் விரக்தியும் ஏமாற்றமும் சேர்ந்து கேலிச்சித்திர விடியோவாக உருவாகியுள்ளது. இதனை பரிதாபகரமானது என்று குறிப்பிடுவதுகூட குறைவானதே’ என்றார்.

    இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் தொடங்கியது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....