Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுலின் பயணத்தால் ஏற்பட்ட அசதி..? திண்ணையில் தூங்கிய கோடீஸ்வர தமிழக எம்.பி

    ராகுலின் பயணத்தால் ஏற்பட்ட அசதி..? திண்ணையில் தூங்கிய கோடீஸ்வர தமிழக எம்.பி

    அசதியால் எனக்கு தொியாமலே இருந்த இடத்தில் தூங்கி விட்டேன் என கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்னவெனில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த திட்டமானது, கடந்த புதன் அன்று கன்னியாகுமரியில் துவங்கப்பட்டது. 

    இந்த பயணத்துக்காக கடந்த ஒரு மாதமாக கன்னியாகுமாியில் காங்கிரஸ் தலைவா்கள் முகாமிட்டு தொடக்க விழா மற்றும் ராகுல் காந்தி நடந்து செல்லும் சாலை தங்கும் இடம் சம்பந்தமாக ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் நடந்து வந்தது. இதற்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் தலைமை தாங்கினார். 

    இந்நிலையில், விஜய் வசந்த் கடந்த 7-ம் தேதி இந்த பயண தொடக்க விழாவில் இருந்து ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் பங்குபெற்று வருகிறாா். மேலும் நடை பயணத்தில் ராகுல் காந்தி ஓய்வு எடுத்தாலும் விஜய் வசந்த் ஓய்வு இல்லாமல் அடுத்த கட்ட பணிகளை குறித்து நிா்வாகிகளிடம் தொடர்பில் இருந்துள்ளார். 

    இந்த நிலையில் 3-ம்  நாள் நடைபயணமான நேற்று மதியம் ராகுல் காந்தி புலியூா்குறிச்சி முட்டியிடிச்சான் பாறை தேவசகாயம் சா்ச்சில் ஓய்வு எடுத்தாா்.

     அப்போது அதன் வளாகத்தில் காங்கிரஸ் மற்ற நிா்வாகிகளும் இருந்தனா். அப்போது ஒரு வராண்டாவில் விஜய் வசந்த படுத்து தூங்கி விட்டாா்.  இதை மற்றவா்கள் எல்லாம் பாா்த்து அவா் தூங்கட்டும் என்று சொல்லி கொண்டு சென்றனா். இந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

    இதுகுறித்து விஜய் வசந்த் அங்கிருந்தவர்களிடம் கூறியதாவது, இரவு நன்றாக தூங்கி ஐந்தாறு நாட்கள் ஆகி விட்டது. பகல் நேரத்திலும் நல்ல ரெஸ்ட் இல்லை. அதுனால இருந்த அசதியால் எனக்கு தொியாமலே இருந்த இடத்தில் தூங்கி விட்டேன் என்றாா்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....