Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும் தான்- ஜெய்ராம் ரமேஷ்

    பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும் தான்- ஜெய்ராம் ரமேஷ்

    பாஜகவை வலுவாக எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும் தான் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

    தில்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

    அப்போது அவர், மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது முக்கியம் என காங்கிரஸ் கருதுவதாகவும், காங்கிரஸ் இல்லாத எந்த எதிர்க்கட்சி கூட்டணியும் வெற்றி பெறாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தால் மட்டுமே, எதிர்க்கட்சிகள் கூட்டணியும் வலுவாக இருக்கும் என தெரிவித்தார். 

    காங்கிரஸின் ‘இந்திய ஒற்றுமை’ நடைப்பயணம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்து இருப்பதாகவும், எதிர்கட்சிகளை காங்கிரஸ் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை காங்கிரஸ் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் எவரின் சான்றிதழும் காங்கிரசுக்குத் தேவையில்லை எனவும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

    தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுடன் எந்தவித சமரசத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், வலுவாக எதிர்த்து வருகிற ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும் தான். எந்தவித இரட்டை நிலைப்பாட்டையும் கொண்டிருக்காமல், பாஜகவை காங்கிரஸ் எதிர்க்கிறது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். 

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; இன்று முதல் பெயர் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....