Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்‌ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டம்: காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்த முன்னாள் அமைச்சர்!

    ‌ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டம்: காவல் அதிகாரியின் சட்டையைப் பிடித்த முன்னாள் அமைச்சர்!

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சார்பில், நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது.

    நிதிப் பற்றாக்குறையால் தவித்த இந்நிறுவனத்திற்கு, காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 இலட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்து உதவியது. இந்த வட்டியில்லா கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனத்திற்கு விற்றது. இந்த பங்கு விற்பனையில் மோசடி நடந்துள்ளது என இருவர் மீதும் வழக்குப் பதிவாகியுள்ளது.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நிகழ்ந்த மோசடி குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இன்றும் இவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டங்களை நடத்தினர்‌. இந்தப் போராட்டத்தின் போது, கைது செய்ய முயன்ற காவல் துறையினர் ஒருவரின் சட்டையை, பொதுமக்கள் மத்தியில் முன்னாள் மத்திய அமைச்சரான ரேணுகா சவுத்ரி பிடித்து இழுத்தார். இந்தச் சம்பவம் போராட்டக் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதற்கும், விசாரணை நடத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்தந்த மாநிலத்தில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

    தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில், ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் மும்முரமாக இருந்தனர்.

    அச்சமயத்தில், போராட்ட களத்தில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, காவல் துறையைச் சேர்ந்த ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்தார். இதனையடுத்து, அங்கிருந்த பெண் காவலர்கள், ரேணுகா சவுத்ரியை பிடித்து வேனிற்கு இழுத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    “அப்ப வச்சுக்கிறேன் உன்னை” – மா.சுப்ரமணியன் முன்னிலையில் தாம்பரம் துணை மேயர் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....