Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் 15 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். 

    அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். 

    இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

    அப்போது அவர், வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான் எனவும், ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை தான் எதிர்பார்க்கவில்லை எனவும், இவ்வளவு பெரிய வெற்றியை ஈரோடு மக்கள் தந்து இருப்பதாகவும் தெரிவித்தார். 

    தன்னை வெற்றி பெற வைத்த ஈரோடு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றும், இந்த வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த வெற்றி அவரது ஆட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார். 

    நாகாலாந்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான ஹேக்கானி ஜக்காலு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....