Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தில்லிக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் நடைபயணம்...

    தில்லிக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் நடைபயணம்…

    ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் ஹரியானாவில் இருந்து இன்று தில்லிக்குள் நுழைந்தது. 

    ராகுல் காந்தி, வருகிற 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய ஒற்றுமை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பயணம் 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் ராகுல் காந்தியுடன் பிரபலங்கள் பலரும் கலந்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து வருகின்றனர். 

    இந்நிலையில், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணமானது இன்று காலை ஹரியானாவில் பரிதாபாத் நகரில் இருந்து தில்லிக்குள் நுழைந்தது. இதில் ஆயிரக்கணக்கில் மக்கள் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டு வருகின்றனர் . 

    இன்றைய நடைபயணம் தில்லி செங்கோட்டையில்  முடிவடையும் என்றும், இதன் பிறகு, ஒரு வார கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தில்லியில் இருந்து ஹிமாச்சல் பிரதேசம் வழியாக ஜம்மு-காஷ்மீர் சென்று முடிவடையும் என்றும் ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இலங்கைக்கு உதவிய இந்தியா; நன்றி தெரிவித்த அமைச்சர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....