Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அதிக வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்த வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை: முதல்வர் மு.க.ஸ்டாலின்...

    அதிக வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்த வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு 23,314.65 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டி சாதனை புரிந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    வணிகவரித்துறையில் மட்டும் கடந்த ஆண்டு 56,310 கோடி ரூபாய் வரி வருவாய் இருந்ததாகவும், அதே இந்த ஆண்டு 20,529 கோடி ரூபாய் வரி வசூல் செய்துள்ளதாகவும், ஒப்பிடுகையில் 76,839 கோடி ரூபாய் கூடுதலாக வரி வசூல் செய்து சாதிதனை படைத்துள்ளது.

    மேலும் வணிகவரித் துறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வரி செலுத்தும்  வணிகர்களின் எண்ணிக்கை 5,54,153 இருந்தது, ஆனால் இந்த் ஆண்டு 6,73,339 ஆக உயர்ந்துள்ளதாகவும், ஒப்பிடுகையில் 1,19,186 வணிகர்கள் வரி வரம்புக்குள் கூடுதலாக கொண்டுவரப்பட்டு வணிகவரித்துறையில் வரி தணிக்கைகள், கூடுதல் சுற்றுப்படைகள் மூலம் சரக்கு வாகனங்களை கண்காணித்தல், சோதனை, கொள்முதல் அதிகரிப்பு, போலி பட்டியல் வணிகம் தடுத்தல், உள்ளிட்ட நடவடிக்கைகளால் கூடுதல் வணிகவரி வசூல் செய்து அரசிற்கு வருவாய் ஈட்டி இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதிவுத்துறையில் பதிவு பணி நாட்கள் அதிகப்படுத்தியது. பதிவு நாளன்றே ஆவணங்களை திருப்பி தருவது, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதிவில் முன்னுரிமை பதிவுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக பதிவு எல்லைகளை சீரமைத்தது மற்றும் புதியதாக 5 பதிவு மாவட்டங்களை உருவாக்கியது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தொடர்ந்து நிதி வருவாய்
    பதிவுத்துறையில் அதிகரித்து வருவதாகவும் மேலும் டெல்லியில் நடைபெற்ற 4th TIOL National Taxation Awards 2022 விருது வழங்கும் விழாவில் வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ததற்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளதாகவும் கூறபட்டுள்ளது. இதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினிடம் இத்துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர்.

    தொடங்கிய குரூப் 1 தேர்வு; 92 காலிப்பணியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....