Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'இந்த கார் வேண்டாம்' - திருமணத்தை நிறுத்திய பேராசிரியர்..

    ‘இந்த கார் வேண்டாம்’ – திருமணத்தை நிறுத்திய பேராசிரியர்..

    உத்தர பிரதேசத்தில் வரதட்சணையாக கேட்ட காருக்கு பதிலாக வேறொரு கார் கொடுத்ததால் பேராசிரியர் ஒருவர் தனது திருமணத்தையே நிறுத்திய சம்பவம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் விஹார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வரதட்சணையாக கார் தருவதாக பேசப்பட்டுள்ளது. 

    அதன்படி மணமகன் வீட்டில் இருந்து டொயோட்டா நிறுவனத்தின் பார்சுனர் காரை கேட்டுள்ளனர். ஆனால், கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி மணமகள் வீட்டில் இருந்து மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்-ஆர் காரை பரிசாக கொடுக்க முன்பதிவு செய்திருந்தனர். 

    இதனை அறிந்த மணமகன் வீட்டார் காரை மாற்றி பதிவு செய்யுமாறு கேட்டுள்ளனர். இருப்பினும் மணமகள் வீட்டார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த மணமகனான பேராசிரியர் கடந்த 23 ஆம் தேதி மணமகளுக்கு குறுஞ்செய்தி வழியாக திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். 

    இந்தத் தகவல் மணமகள் வீட்டில் தெரிய, மணமகன் மீது புகார் அளித்ததன் பேரில் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பேராசிரியராக இருப்பவரே வரதட்சணை கேட்டுள்ளார், என்பது இதில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேண்டுமா? – 2கே கிட்ஸுக்கு வந்த அரிய வாய்ப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....