Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு"10,000 பேருக்கு வேலைவாய்ப்பு" ரூ.600 கோடி செலவில் நம்ம மதுரையிலும் ''டைடல் பூங்கா''!

    “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு” ரூ.600 கோடி செலவில் நம்ம மதுரையிலும் ”டைடல் பூங்கா”!

    மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பூங்கா அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    மதுரையில்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. 

    இம்மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் துறைச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை டைடல் பூங்கா குறித்து தெரிவித்ததாவது

    தகவல் தொழில்நுட்பப் புரட்சியை தமிழகத்தின் இரண்டாம், மூன்றாம் நகரங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக கோவையில் டைடல் நிறுவனம் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கியுள்ளது. 

    இதையும் படிங்க: காய்ச்சல், நோய்களுக்கு மக்களிடையே விழிப்புணர்வு வேண்டும்-மருத்துவர் ராமதாசு 

    மேலும், திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் உதகை ஆகிய இடங்களில் புதிதாக டைடல் பூங்காக்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில், மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.

    முதல் கட்டமாக 5 ஏக்கரில் அமையும் இதை டைடல் நிறுவனம் மற்றும் மதுரை மாநகராட்சி ஆகியவை இணைந்து அமைக்கின்றன. இந்த பூங்காவை டைடல் நிறுவனம் நிர்வகிக்கும். இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் இப்பூங்கா விரிவுபடுத்தப்படும்.

    தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமையும் இந்தப் பூங்காவால் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 

    இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....