Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் அறிவிப்பு

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் அறிவிப்பு

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    11 ஆம் வகுப்பு அரியர் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் என்றும், இதர கட்டணம் 35 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயிலாத மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை பெற வேண்டும் கூறப்பட்டுள்ளது. 

    வருகிற ஜனவரி 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று https://www.dge1.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ‘இந்த கார் வேண்டாம்’ – திருமணத்தை நிறுத்திய பேராசிரியர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....