Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்சிறை கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு; போக்சோ வழக்கில் கைதானவரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு!

    சிறை கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு; போக்சோ வழக்கில் கைதானவரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு!

    புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இரண்டு கைதிகள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டதில் போக்சோ வழக்கில் கைதானவரின் மண்டை உடைந்தது.

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ரெட்டியார்பாளையம் மூலவன் என்பவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், சிறையில் உள்ள கழிப்பறை அருகே தண்ணீர் பிடிக்க நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, திருக்கனூரை சேர்ந்த குமரன் என்ற செல்வம் வந்தார். அப்போது மூலவனை, குமரன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து கைதிகள் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் வாக்குவாதம் முற்றவே இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த குமரன், அங்கிருந்த இரும்பு வாளியை எடுத்து மூலவனை தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    சம்பவம் குறித்து வந்த சிறை வார்டன் சக்ரவர்த்தி இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் கைதிகள் இருவரும் தொடர்ந்து ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதனை தொடர்ந்து 2 பேர் மீதும் சிறைக்காவலர்கள் லத்தியால் லேசான தடியடி நடத்தி மோதலை தடுத்தனர். சிறையில் 2 கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல் அங்குள்ள சக கைதிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    மண்டை உடைந்து படுகாயம் அடைந்த கைதி மூலவனை சிகிச்சைக்காக காலாப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறைக்காவலர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கைதிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உண்டியல் சேமிப்பை ராகுல் காந்தியின் பாத யாத்திரை செலவுக்கு கொடுத்த சிறுவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....