Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட வர்த்தக தளங்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ்; காரணம் என்ன?

    அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட வர்த்தக தளங்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ்; காரணம் என்ன?

    முறையான உரிமம் பெறாமல் இணையத்தில் மருந்து விற்பனையில் ஈடுபட்ட அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட 20 இணையவழி வர்த்தக தளங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

    மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு சார்பில் அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்து மாநில உரிமை வழங்கும் அதிகாரிகளிடம் மருந்து விற்பனையில் ஈடுபட முறையான உரிமம் பெற வேண்டும் என்றும், அப்படி உரிமம் பெறாதவர்கள் இணைய வழியாக மருந்து விற்பனையில் ஈடுபடுவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தீர்ப்பளித்ததாகவும் தெரிவித்துள்ளது. 

    மேலும் இந்தத் தீர்ப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இரு முறையும், கடந்த 3 ஆம் தேதி அன்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

    இருப்பினும் முறையான உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இணையத்தில் மருந்து விற்பனையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. 

    சுற்றறிக்கை வழங்கப்பட 2 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அப்படி விளக்கம் அளிக்காமல் தவறும் பட்சத்தில் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் சட்டவிரோதமாக மருந்து விற்பனை செய்தல், இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல் அல்லது விநியோகித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்னும் 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காத பட்சத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நிறுவனங்கள் எதுவும் கூற விரும்பவில்லை எனக் கருதி, எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது. 

    இந்தியா vs பாகிஸ்தான்: ஜோராக ஆடிய ஜெமிமா.. வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....