Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅசாமில் குழந்தை திருமணங்கள்; இதுவரை 2000-க்கும் அதிகமானோர் கைது!

    அசாமில் குழந்தை திருமணங்கள்; இதுவரை 2000-க்கும் அதிகமானோர் கைது!

    அசாமில் குழந்தை திருமணங்களில் தொடர்புடைய 2,170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. 

    மேலும் குற்றவாளிகளை கைது செய்வது குறித்தும், விரிவான வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. 

    இதற்கு அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா உத்தரவு அளித்ததன் பேரில், குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் இன்று காலை வரை கைது செய்யப்பட்டதாக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரசந்த குமார் தெரிவித்துள்ளார். 

    கைது செய்யப்பட்டவர்களில் 52 பேர் திருமண சடங்குகளை நடத்திய சாமியார்கள்  என டிஜிபி தெரிவித்துள்ளார். இவர்களில் பலர் தூப்ரி, பார்பேட்டா, கோக்ராஜர் மற்றும் விஸ்வநாத் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வசூலில் அசத்தும் திருமலை எழுமலையான் கோயில்; வெளிவந்த அறிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....