Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நீதிக்கான கி. வீரமணி விருது! வழங்கியது பெரியார் பன்னாட்டு அமைப்பு

    முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நீதிக்கான கி. வீரமணி விருது! வழங்கியது பெரியார் பன்னாட்டு அமைப்பு

    பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா சமூகநீதிக்கான கி. வீரமணி விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கியது.

    சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (2.12.2022) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா சார்பில் “சமூகநீதிக்கான கி. வீரமணி விருது” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவ்வமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவனால் வழங்கப்பட்டது.

    இவ்விருது 1996-ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் திரு. வி.பி. சிங் அவர்கள், 1997-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. சீதாராம் கேசரி அவர்கள், 2000-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் செல்வி மாயாவதி அவர்கள், 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2015-ஆம் ஆண்டு பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் அவர்கள் போன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. கே. பாலகிருஷ்ணன், மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஒற்றுமை நடைப்பயணத்தை முன்கூட்டியே முடிக்கப்போகிறாரா ராகுல்! என்னவாக இருக்கும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....