Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்

    தமிழகத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தப் போட்டிக்காக ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் நவீன விளையாட்டு அரங்கம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 22 ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்படுகிறது. இந்தப் போட்டி அரங்கில் மொத்தம் 700 சதுரங்க போர்டு மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

    இந்நிலையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா இன்று (ஜூலை 28) மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடக்க விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். 

    ஒலிம்பியாட் செஸ் போட்டி: வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....