Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொன்ற கொடூரம்...கொலையாளிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

    மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொன்ற கொடூரம்…கொலையாளிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

    பரங்கிமலையில் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதிஷூக்கு நீதிமன்றம் அக்டோபர் 8-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது. 

    சென்னை கிண்டிக்கு அருகில் உள்ள பகுதிதான் ஆதம்பாக்கம். இப்பகுதியைச் சேர்ந்த சதீஷிற்கு வயது 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான சத்தியா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். 

    இருவரும் வழக்கம்போல் ஆதம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு அதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. 

    இதையடுத்து, அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன் மாணவி சத்தியாவை, சதீஷ் தள்ளவிட்டதாக கூறப்படுகிறது. ரயிலில் சிக்கிய சத்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீவிர தேடுதலுக்குப் பின் தலைமறைவான சதிஷ் கைது செய்யப்பட்டார்.

    இதனிடையே நடைபெற்ற விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் தலைமைக் காவலராக பணியாற்றி வருவதும், கைது செய்யப்பட்டுள்ள சதிஷ் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பதும் தெரிய வந்தது. இதன்பிறகு, உயிரிழந்த மாணவி சத்தியாவின் தந்தை மாணிக்கத்திடம் விசாரணை நடைபெற்று வந்தது.

    மகள் சத்தியா கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். மகள் சத்தியாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தந்தை மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மாணவி கொலை வழக்கில் காதல் கொலையாளி வாக்குமூலம்!

    இதைத்தொடர்ந்து சதீஷிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதுவரையில் சதீஷ் தெரிவத்துள்ளதாவது : 

    நான் 2 ஆண்டுகளாக சத்தியாவை காதலித்து வருகிறேன். ஆனால் சத்தியா என்னுடைய காதலை ஏற்கவில்லை. நான் தொடர்ந்து என் காதலை ஏற்குமாறு வற்புறுத்தினேன். சத்யா மனம் மாறுவார் என்று என்ணினேன். ஆனால் என் காதலை சத்தியா ஏற்கவில்லை. 

    சத்தியாவை என்னால் மறக்க முடியவில்லை. இதையடுத்து சத்தியாவை கொலை செய்ய திட்டமிட்டேன். தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து தான் சத்தியா கல்லூரிக்கு செல்வார். இதனால் அங்கு வைத்து ரயிலில் தள்ளி விட்டு கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன்.

    இதற்காக நேற்று (வியாழக்கிழமை) மதியம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் முன் கூட்டியே சென்று காத்திருந்தேன். பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்தியா தனது தோழியுடன் வந்ததை பார்த்ததும் அவரது அருகில் சென்று பேசினேன். அப்போது, அவள் என்னை மதிக்காத வகையில் நடந்து கொண்டாள். 

    எனக்கு கிடைக்காத சத்தியா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு வாழக்கூடாது என்ற எண்ணத்தில் ஓடும் ரயிலில் சத்தியாவை தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டேன்.

    இவ்வாறு சதிஷ் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. 

    இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  சதிஷ் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் சதிஷை அக்டோபர் 28-ம் தேதி காவல் வைக்க உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சதிஷின் மீது தாக்குதல் நடத்தினர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....