Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'இது ஆரோக்கியமான செயல் அல்ல' - அண்ணாமலையை எச்சரித்த பத்திரிகையாளர் மன்றம்

    ‘இது ஆரோக்கியமான செயல் அல்ல’ – அண்ணாமலையை எச்சரித்த பத்திரிகையாளர் மன்றம்

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    சென்னையில் இன்று காலை பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது,  செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையிடம், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து கேள்வி எழுப்பினார். 

    அதற்கு அண்ணாமலை, கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசியுறள்ளார். இச்சம்பவம் சர்ச்சை ஆனது.

    இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் , எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 

    இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

    அரசியலில் வளர்ந்து வரும் அண்ணாமலை ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும். 

    யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் 

    சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தொடர்ந்து இரண்டு படம் ஹிட்; சம்பளத்தை உயர்த்திய நடிகை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....