Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலிடம் பெற்ற சென்னை உயர்நீதிமன்றம்

    முதலிடம் பெற்ற சென்னை உயர்நீதிமன்றம்

    இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 18-வது ஆண்டு விழா மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை சங்கம் 17-வது ஆண்டு விழா ஆகியவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று (ஜூலை 29) நடைபெற்றது. 

    இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பேசியதாவது : 

    இந்திய நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது. இதில், மதுரை கிளையின் பங்கு அதிகம். 

    மேலும், கொரோனா காலத்தில் அதிகளவில் வழக்குகளை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றமும், மதுரை கிளையும் சாதனை படைத்துள்ளது.

    வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க வழக்குரைஞர்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். வழக்குரைஞர்கள் நினைத்தால் மட்டுமே நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அவ்வாறு இல்லாவிட்டால், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். இதனால், வழக்குத் தொடர்பவர்களுக்கு வழக்குரைஞர்கள் நம்பிக்கை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பேசினார். 

    நீதிபதிகளை விமர்சிக்க ஒரு எல்லையுண்டு – உச்சநீதிமன்றம் கருத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....