Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு130 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய சென்னை சிறுமி!

    130 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய சென்னை சிறுமி!

    சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 130 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைத்துள்ளார். 

    சென்னை திருவொற்றியூரில் வசித்து வருபவர் சிறுமி சுபிக்ஷா. இவர் 8-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஆவார். சுபிக்ஷா உலக நாடுகளின் தேசிய கீதங்களைப் பாடும் சாதனையை படைக்க முயற்சி செய்துள்ளார். இவர் இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அப்படி அவர் அல்பேனியா, ஆபிகானிஸ்தான் என அகர வரிசைப்படி, 192 நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடம் செய்து வைத்துள்ளார். இதனிடையே, சென்னை திருவொற்றியூரில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுமி சுபிக்ஷா, சுமார் 6 மணி நேரமாக இடைவேளை இல்லாமல், 130 நாடுகளின் தேசிய கீதங்களை, அதன் சுருதி மாறாமல் பாடி அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர், உலக சாதனை படைத்துள்ளார். 

    இவரின் இந்தச் சாதனைக்கு இப்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....