Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை சென்ட்ரல் இனி இப்படித்தான்... வெளிவந்த அறிவிப்பு..

    சென்னை சென்ட்ரல் இனி இப்படித்தான்… வெளிவந்த அறிவிப்பு..

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விமான நிலையங்களைப் போல, பயணிகள் டிஜிட்டல் பலகைகளைப் பார்த்து அல்லது தகவல் மையத்தின் மூலம் தான் இனி ரயில்கள் புறப்பாடு பற்றி அறிந்து கொள்ள முடியும். 

    இந்திய அளவில் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது, டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை பொதுவாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று அழைப்பது வழக்கத்தில் உள்ளது. 

    இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அரங்கேறியுள்ள நிகழ்வு ஒன்று ஆதரவான கருத்துகளையும், எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. அதன்படி, இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வெளியூர்களுக்குப் புறப்படும் ரயில்கள் பற்றிய அறிவிப்புகள் இனி ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படாது.

    இனி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விமான நிலையங்களைப் போல, பயணிகள் டிஜிட்டல் பலகைகளைப் பார்த்து அல்லது தகவல் மையத்தின் மூலம் தான் இனி ரயில்கள் புறப்பாடு பற்றி அறிந்து கொள்ள முடியும். 

    இந்த முயற்சிக்காக ரயில் நிலையத்தின் பல்வேறு நுழைவாயில்களில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நல்ல இயங்கும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மூன்று நுழைவாயில்களிலும் டிஜிட்டல் பலகைகள் வைக்கப்பட்டு, அதில் ரயில்கள் புறப்பாடு நேரம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் திரையிடப்படுகிறது. 

    டிஜிட்டல் பலகைகள் இருப்பினும், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பாடு உள்ளிட்ட தகவல்கள் குறித்த அறிவிப்புகள் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படுகிறது. 

    ‘என் கடினமான நாட்களில் தோனி மட்டுமேதான் என்னை தொடர்புக்கொண்டார்’ – விராட் கோலி உருக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....