Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅந்தமானுக்கான விமா சேவை 18-ஆம் தேதி வரை ரத்து; காரணம் என்ன?

    அந்தமானுக்கான விமா சேவை 18-ஆம் தேதி வரை ரத்து; காரணம் என்ன?

    அந்தமான் நிக்கோபார் தீவுக்கான விமான சேவைகள் நவம்பர் 18-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக போர்ட் பிளேயர் விமான நிலையம் அறிவித்துள்ளது. 

    உலகளவில் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு பல்வேறு சுற்றுலாப் பயணிகள் உலகெங்கில் இருந்தும் வருகைத்தருகின்றனர். பல்வேறு சிறப்பம்சங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ளது. இந்தக் காரணங்களால், அந்தமானின் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும் முக்கிய தளமாக இருக்கின்றன. 

    இந்நிலையில், போர்ட் பிளேயர் நிலையத்தின் ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தானது நவம்பர் 18-ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த அறிவிப்பால், சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் 14 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக, நவம்பர் 10-ஆம் தேதி அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட்பிளேர் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க:நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்து மூன்றாவது சுற்று மழையா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....