Sunday, May 5, 2024
மேலும்
    Homeவானிலைபுதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...!

    புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…!

    இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாற்று அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் அதாவது 9-ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் ,இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள்தான் கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    மேலும் இந்த நிகழ்வை வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்., நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் 9-ந் தேதியில் இருந்து அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் என்றும்,வரும் 10-ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 9-ஆம் தேதி உருவாக்க உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும், 9, 10 ஆகிய தேதிகளில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் 40 முதல் 60 வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: ‘நாயகன்’ மீண்டும் வரார்..! 35 வருடத்திற்கு பின் இணையும் கமல் – மணிரத்னம்… எகிறும் எதிர்பார்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....