Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைஇரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

     

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

    மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

    அடுத்த 24 மணி நேரத்துக்கு வடதமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும்  கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    சென்னையைப் பொறுத்தவரையில், 

    அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.  

    கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதிகளில் 13 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.  

    இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....