Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் ஆய்வு; சூடுபிடிக்கும் உட்கட்சி விவகாரம்

    அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் ஆய்வு; சூடுபிடிக்கும் உட்கட்சி விவகாரம்

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடமாறு சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று இந்த ஆய்வை நடத்தி வருகின்றனர்.

    அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படுவது தொடர்பாக கடந்த ஜூலை 11-ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அங்கு கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் இறங்கினர் .

    அப்போது ஓ பன்னீர்செல்வம், ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரத்தில் முடிந்தது. இந்த மோதல் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 21-ஆம் தேதி அன்று சீல் அகற்றப்பட்டு, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சியின் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் ஆய்வு மேற்கொண்டு அலுவலகத்தில் காணாமல் போன ஆவணங்கள் மற்றும் பொருட்கள் என்னென்ன என்பதை கணக்கெடுத்தார் .

    இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பத்திரங்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் வங்கியில் வைக்கப்பட்டதற்கான ஆவணங்கள், பீரோவில் வைத்திருந்த ரூ.31 ஆயிரம் பணம், கணக்கு வழக்குகள் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய 2 கணினி, ஹார்டு டிஸ்க், 37 வாகனங்களின் பதிவு பத்திரம், தரை தளத்தில் உள்ள அனைத்து அறைகளின் சாவிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பொருட்களை அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் ஓ.பி.எஸ் , வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது .

    ஆனால், ஓ.பி.எஸ்-க்கு எதிராக சி.வி.சண்முகம் அளித்த புகாரின் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதுதொடர்பாக நாங்கள் அளித்த புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது .

    இந்நிலையில் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான விசாரணை குழு தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கலவரம் தொடர்பான வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு அதிமுக அலுவலகத்தில் மோதல் சம்பவத்தின் போது ஏற்பட்ட சேதங்களையும் பார்வையிட்டனர். இதனால் வழக்கின் விசாரணை அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

    மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை  சி.வி.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

    இதையும் படிங்க : ஒத்தைக்கு ஒத்த ரெடியா? உதயநிதியை வம்பிழுக்கும் அமர் பிரசாத் ரெட்டி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....