Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசிங்கத்திற்கு நடந்த கண்புரை அகற்றும் அறுவை சிகிச்சை! உதவிய மதுரை நிறுவனம்

    சிங்கத்திற்கு நடந்த கண்புரை அகற்றும் அறுவை சிகிச்சை! உதவிய மதுரை நிறுவனம்

    குஜராத்தில் சிங்கத்திற்கு நடந்த கண்புரை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு லென்ஸ் தயாரிப்பில் உதவிய மதுரை நிறுவனம்

    சமீபத்தில், கிர் காட்டிலுள்ள ஜாம்வாடா மலைத்தொடரில் ஐந்து வயது சிங்கத்தின் நடத்தை மலையேற்றக்காரர்களால் கவனிக்கப்பட்டது. இரை அருகில் இருந்தாலும் அந்த சிங்கம் எதுவும் செய்யாமல் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில், அதன் இரு கண்களிலும் கண்புரை இருப்பது தெரியவந்தது. பின்னர் சிங்கம் ஜூனாகத்தில் உள்ள சக்கர்பாக் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டு அங்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ரியாஸ் கடிவார், விலங்கு மருத்துவர், சக்கர்பாக் உயிரியல் பூங்கா வழங்கிய தகவலின்படி, சமீபத்தில் சிங்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்தோம். சிங்கத்தினைப் பற்றிய தகவல் அறிந்த பின் உள்ளூர் காரர்கள் சிங்கத்தினை சக்கர்பார்க்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்குள்ள மருத்துவர்களால் ஒரு மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டது.

    சிங்கத்தின் இரு கண்களிலும் கண்புரை முதிர்ச்சியடைந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். பிறகு சிங்கத்தினை அமைதிப்படுத்தி கண்களில் லென்ஸ் பொருத்த அளவீடு எடுக்கப்பட்டுவிட்டது. இதற்கான லென்ஸ் தயாரிப்பதற்கு, மதுரையைச் சேர்ந்த லென்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை அணுகியுள்ளனர். இந்நிறுவனம் லென்ஸ் தயாரித்து வழங்கிய பின் முதலில் ஒரு கண்ணில் லென்ஸ் பொருத்தப்பட்டு 15 நாட்கள் கண்காணிக்கப்பட்டது. அக்கண் முழுவதும் குணமடைந்த பின் இரண்டாவது கண்ணில் லென்ஸ் பொருத்தப்பட்டது. மீண்டும் 15 நாட்கள் கூண்டில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது சிங்கத்திற்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடைத்துள்ளது. இருப்பினும் இது சக்கர்பாக் பூங்காவின் கண்காணிப்பில் தான் இன்னும் உள்ளது.

    கர்ப்பிணியருக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் ஊழலா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....