Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎது தாழ்ந்த சாதி?- கேள்வி கேட்டு சிக்கிய பெரியார் பல்கலைக்கழகம்

    எது தாழ்ந்த சாதி?- கேள்வி கேட்டு சிக்கிய பெரியார் பல்கலைக்கழகம்

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற முதுகலை வரலாற்று மாணவர்களுக்கான 2 வது செமஸ்டர் தேர்வில் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், 4 சாதி பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.

    செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால், பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதையடுத்து இந்த கேள்வி குறித்து விளக்கம் அளித்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை, பிற பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

    மேலும், வினாத்தாள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக அதை முன்கூட்டியே படித்துப் பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் கிடையாது. சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, மறு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் சாதி ரீதியிலான பாகுபாடுகள் நடந்ததாக எழுந்த புகார் குறித்து, தமிழக சமூகநீதி கண்காணிப்பு குழுவானது அதன் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆய்வு செய்ய சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட சாதி ரீதியான கேள்வியை எதிர்த்து பல சமூக ஆதரவாளர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சாதி ரீதியாக எழுப்பப்பட்ட கேள்வி குறித்து பாமக நிறுவனர் ராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்கள் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.’ எனக் கூறியுள்ளார்.

    தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும்- உள்துறை அமைச்சகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....